2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

வெவ்வேறு விபத்துகளில் எட்டு பேர் படுகாயம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 செப்டெம்பர் 30 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகளில் எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

 

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில், தந்தை-தாய் மற்றும் பிள்ளை ஆகிய மூவரும் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் குச்சவெளி - கும்புறுப்பிட்டி நாவடியைச் சேர்ந்த ஈ.மங்கலேஸ்வரன் (37 வயது) எம்.கௌசலா தேவி (33 வயது) மகளான எம்.அபிஷன் (5 வயது) எனத் தெரியவருகின்றது.

இதேவேளை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜின்னாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் துவிச்சக்கர வண்டி  மோதியதில் இருவரும் காயமடைந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த எம்.எஸ்.காசீம் (70 வயது) என்பவர் படுகாயமடைந்த நிலையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

அத்துடன், துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தபால் கந்தோர் பகுதியில் மோட்டார் சைக்கிள் இரண்டும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

பாலையூற்று பகுதியைச் சேர்ந்த டி.பொடில்டா (32 வயது)  மற்றும் உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஜீ.சதுர்சிகா (22 வயது) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபருடன் வேகமாக சென்ற பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் மொறவெவ-நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்த ஆர்.ஜி.அமரஜீவ  (63 வயது) படுகாயமடைந்துள்ளதுடன், அந்த மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியை கைதுசெய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துகள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X