Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
தீஷான் அஹமட் / 2017 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளை தரமுயர்த்தும் விசேட உயர் மட்டக்குழுக்கூட்டம், சுகாதார, சுதேச வைத்திய அமைச்சின் கொழும்புக் காரியாலயத்தில் நேற்று (04) இடம்பெற்றது.
இதன்போது, தெஹியத்தக்கண்டி, சம்மாந்துறை, வாழைச்சேனை, மூதூர் மற்றும் கிண்ணியா போன்ற ஆதார வைத்தியசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பாகவும் மத்தியரசின் கீழ், இவ்வைத்தியசாலைகளை ஒப்படைப்பதற்கான சாத்திய வளங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
ஆரயம்பதி, அட்டாளைச்சேனை மற்றும் மஹிலடிதீவு போன்றவற்றின் தரத்தை மாற்றுவது தொடர்பாகவும் அதற்கான சார்திய வளங்கள் தொடர்பாகவும் உயர் மட்டக்குழுவால் ஆராய்யப்பட்டது.
இவ்வைத்தியசாலைகளை தரமுயர்துவதில் கிழக்கு மாகாணக் சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர், அதிக கரிசனையுடன் செயற்பட்டு வருவதுடன், இது தொடர்பாக கிழக்கு மாகாண அமைச்சர்களின் வாரியத்தில் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டது.
இருந்தாலும் இலங்கையில் தற்போது நெருங்கியுள்ள ஆளனிப்பற்றாக்குறை இருந்த இருந்த போதிலும் இவ்வாரான வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதால் உள்ள நண்மைகள் தீமைகள் தொடர்பாகவும், அதில் உள்ள சாத்திய வளங்கள் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஒப்படைக்கப்பட்டு ஆராயப்பட்டு அது தொடர்பாக விரிவான தீர்மானத்தைமேற்கொண்டனர்.
இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட், மத்தியரசின், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஜயசுந்தர பண்டார, மத்தியரசின் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருனாகரன், கிழக்கு மாகாண பணிப்பாளர் முருகானந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரவு பொறுப்பாளர் வைத்தியர் ப்ரேம், அம்பாரை, மட்டக்களப்பு, கல்முனை திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர்களும், திட்டமிடல் பிரிவு பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு தீர்மானங்களை மேற்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
3 hours ago