2025 மே 14, புதன்கிழமை

வைத்தியரை நியமிக்கக் கோரி சம்பூரில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், தீஷான் அஹமட் 

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் அமைந்துள்ள சம்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு, நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு கோரி, வைத்தியசாலைக்கு முன்னால், இன்று (10) காலை மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மே மாதம், திறந்து வைக்கப்பட்ட இவ் வைத்தியசாலைக்கு இன்னும் நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படாமல் உள்ளார். தற்காலிகமாக வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் எந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு வருவார் போவார் என்று கூடத் தமக்குத் தெரியாதுள்ளது என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

அத்தோடு, வைத்தியர் வருகை பற்றிய எந்ததொரு தகவலும் விவரப் பலகையில் இடப்படவில்லையெனவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

அவசரமாக ஏற்படுகின்ற நோய்களுக்கு 5 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள மூதூர் தள வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .