Thipaan / 2016 ஜூன் 22 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
காட்டு யானைகளினால், கடந்த 13 திகதி சேதமாக்கப்பட்ட திருகோணமலை மொறவெவ ஆரம்ப சுகாதார பராமரிப்பு வைத்தியசாலை, இதுவரை திருத்தப்படாதமையினை கண்டித்து, நாளை (23) ஆர்பாட்டமொன்றினை நடாத்தவுள்ளதாக மொறவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் டபிள்யூ.ஆர். றம்பண்டா தெரிவித்தார்.
மொறவெவ பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்கள் ஒன்றினைந்து இவ்வார்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளன.
திருகோணமலை-ஹொரவபொத்தானை பிரதான வீதியில் காணப்படுகின்ற இவ்வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அதிகளவில் வருகை தருகின்ற போதிலும் வளப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் காட்டு யானைகளினால் சேதமாக்கப்பட்ட வைத்தியசாலையை கூடிய விரைவில் புனரமைத்துத் தருமாறு கோரியே ஆர்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago