Princiya Dixci / 2016 ஜூலை 07 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, அலஸ்தோட்டப் பகுதியில் நேற்று புதன்கிழமை (06) இரவு 08 மணியளவில், துவிச்சக்கர வண்டியுடன் - மோட்டார் சைக்கிள் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், திருகோணமலை-பாலையூற்றைச் சேர்ந்த எம்.சித்ரவேல் மெனி (வயது 62) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நிலாவெளிப் பகுதிக்கு வேகமாகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் நிலாவெளி-02ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த எஸ். திவியராஜ் (வயது 23) மற்றும் கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.கஜன் (வயது 21) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக உப்புவெளிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
49 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
21 Mar 2026