2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
 
திருகோணமலை, கிண்ணியா பிரதான வீதி, புஹாரிச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியை ஒருவரும் அவரது தந்தையும்  காயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் இப்ராஹீம் றிபாதா பர்வின் (வயது 25) என்பவரும் அவரது தந்தையான ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி ஆதிகாரி ஆர்.இப்ராஹிம் என்பவருமே  விபத்துக்குள்ளாகினர்.

குறித்த ஆசிரியை தனது தந்தையுடன்; மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது,  அம்மோட்டார் சைக்கிளுடன் எதிரே வந்த லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரியவருகிறது.
 
இந்த விபத்துக் குறித்து கிண்ணியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .