Thipaan / 2016 ஜூலை 03 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை - அக்போபுர பிரதான வீதியின் அக்போபுர, கித்துல் ஊற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இருவர், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி லொறியொன்றினை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில், கந்தளாய் பகுதியைச் சேர்ந்த எச்.குலசூரிய (வயது 42), ஜி.பி.அபேசுந்தர (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
48 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
21 Mar 2026