Thipaan / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் 59ஆம் கட்டைப் பகுதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (18) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களே படுகாயமடைந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியின் டயர் திடிரென வெடித்ததனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த இருவரும், தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் விசாரணைகளை, மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026