2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் எழுவர் காயம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை -புத்தளம் வீதியில் கன்னியா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சொகுசு பஸ்ஸும்; உழவு இயந்திரமும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் 3 நாள் விடுமுறையைக் களிப்பதற்காக திருகோணமலைக்கு  குறித்த பஸ்ஸில் வந்திருந்த வேளையிலேயே விபத்துக்கு உள்ளானார்கள்.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X