Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 15 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை-ஹொரவபொத்தானை பிரதான வீதியில் சிறியரக லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 05 வயது சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள், ஹொரவபொத்தான பிரதேச வைத்தியசாலையில் இன்று (15) காலை 10.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிசிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த கெப்பற்றிக்கொல்லாவ, ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மட் சாஹிப் (36 வயது), எஸ்.மிம்மினாஸ் (34 வயது) மற்றும் எம் எஸ்.சிபான் (05வயது) எனவும் பொலிஸார் கூறினர்.
வவுனியாவிலிருந்து திருகோணமலைக்கு வாழைப்பழங்களை ஏற்றிச்சென்ற லொறி, ரொட்டவௌ பகுதியிலிருந்து ஹொரவபொத்தானைக்கு சென்ற மோட்டார் சைக்கிளுடன் மரதன்கடவெல பகுதியில் வைத்து மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
20 minute ago
25 minute ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
8 hours ago
8 hours ago