Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூலை 11 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, அபயபுர பகுதியில் முச்சக்கரவண்டியுடன் கெப் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கெப் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (10) இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்தவர், திருகோணமலை, உவர்மலை லோவர் வீதியில் வசிக்கும் ஆர். சுந்தரலிங்கம் (59 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, கண்டி பிரதான வீதியினூடாக வேகமாக வந்த கெப் வாகனம் அன்புவெளிபுரம் பகுதியிலிருந்து வந்த முச்;சக்கரவண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்துடன் தொடர்புடைய சாரதியை, திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று, ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
31 Jul 2025
31 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jul 2025
31 Jul 2025