Thipaan / 2016 மே 25 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், பதுர்தீன் சியானா
திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, மூதூரிலிருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியின் சாரதியான இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூரில் இறாக்குழி பாலத்துக்கு அருகாமையில், இன்று மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், முகம்மது ஸப்ரீன் (வயது 18) என்பவர் உயிரிழந்ததுடன், எம்.எம்.இபாம் (22 வயது) மற்றும் மூதூர்-ஜாயா நகரைச்சேர்ந்த எஸ்.ரம்ஸாத் (20 வயது) ஆகிய இருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தனியார் பஸ்ஸில் பயணித்த கிண்ணியா, பைசல் நகரைச் சேர்ந்த கனேஸ் பானுப்பிரியா (22வயது), கை முறிவு காரணமாக, திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் ஜனாஸா, மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவத்த மூதூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரவித்தனர்.
54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago