Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 28 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை-கந்தளாய் பிரதான வீதியின் விலாங்குளம் பகுதியில் நேற்றுப் புதன்கிழமை (27) மாலை இடம்பெற்ற விபத்தில், மீன் லொறியின் சாரதி, நேற்றுப் புதன்கிழமை (27) இரவு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், விபத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதியைக் கைதுசெய்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
மீன் ஏற்றி சென்ற லொறியும் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வானகமும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில், குச்சவெளி, புடவைக்கட்டு பகுதியைச் சேர்ந்த எம்.அன்சார் (55 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மணல் ஏற்றிச்சென்ற லொறி விலாங்குளம் பகுதிக்குள் செல்வதற்காக திரும்பிய நிலையில், வேகமாக வந்த மீன் லொறி விபத்துக்குள்ளானதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் படுகாயமடைந்த மீன் லொறியின் உதவியாளரான, கிண்ணியா-ஆலிம் வீதியைச் சேர்ந்த கே.அப்துல்கபூர் (57 வயது), திருகோணமலை பொது வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகிவதாகவுமு; உயிரிழந்தவரின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .