Princiya Dixci / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை, கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 24ஆம் கட்டை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் இன்று (24) அதிகாலை, மணல் ஏற்றி வந்த ரிப்பர் வாகனமும் மூன்று பேர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கந்தளாய் தலைமையப் பொலிஸார் தெரிவித்தனர்.
இருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் மற்றையவர் கந்தளாய் தள வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரிப்பர் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கந்தளாய் தலைமையப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
3 hours ago