2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெருகல் படுகொலையின் 13ஆவது நினைவுதினம்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

வெருகல் படுகொலையின்13ஆவது நினைவுதினம் வெருகல் மலைப் பூங்காவில் திங்கட்கிழமை (10) மாலை  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து  மௌன அஞ்சலி  செலுத்தப்பட்டதுடன், தீபச்சுடரும் ஏற்றப்பட்டது.
2004.4.10 அன்று வெருகல் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 210 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித்  தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.திரவியம், பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், மகளிர் அணித்தலைவி செல்வி மனோகரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .