2025 மே 19, திங்கட்கிழமை

வில்பனாக்குளத்தில் இளைஞர் படை பயிற்சி முகாம் திறந்து வைப்பு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவுக்;குட்பட்ட வில்பனாக்குளம் பகுதியில், கிழக்கு மாகாண இளைஞர் படையணியின் உதவிப்பணிப்பாளரினால், இளைஞர் படை பயிற்சி முகாமொன்று, வியாழக்கிழமை (04) காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கோமரங்கடவெல பிரதேசத்துக்குப் பொறுப்பான கேணல் திலகரெட்ண, பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் சமன்த கம்ஹேவா, இளைஞர் படையணியின் பொறுப்பதிகாரி மேஜர் பீ.ஏ.ஆர்.உபணந்த பயிற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண இளைஞர் படையனியின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.ரணவீர ,

'இளைஞர் படையானது, அப்போது இளைஞர் விவகார அமைச்சராக இருந்த  தற்போதய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். அதனடிப்படையில், தற்பொழுது திருகோணமலை மாவட்டத்தையும் மொனராகலை மாவட்டத்தையும் தெரிவு செய்தமைக்கான நோக்கம், இம்மாவட்டங்களிலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்துவதேயாகும்.

ஒவ்வொரு இடத்துக்குச் செல்கின்ற  போதும், மொழி பெயர்ப்பாளர்களை அழைத்துச்செல்வதுண்டு.  ஆனாலும், இவ்விடத்தில் தமிழ் பேசக்கூடிய யாரும் சமுகமளிக்கவில்லை. இந்த பயிற்சியில் எந்த இனமாக இருந்தாலும் எந்த சாதியாக இருந்தாலும் வந்து பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த இளைஞர் படை பயிற்சி முகாமில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும். அத்துடன், தலைமைத்துவப் பயிற்சிகளையும் வழங்க இருக்கின்றோம்.

இதேவேளை, 16 வயது தொடக்கம் 26 வயது வரைக்குமான இளைஞர், யுவதிகளுக்கு காப்புறுதிகளை வழங்குகின்றோம். இந்தப் பயிற்சிகளை முடித்துவிட்டு மேலதிகமாகக் கற்க விரும்பினால், அதற்கும் நாம் செலவுகளை வழங்கிவருகின்றோம். தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுத்தருகின்றோம்.

இந்தப் பயிற்சி முகாமில் குறைபாடுகள் காணப்பட்டால், இரண்டு வாரங்களுக்குள் தீர்த்து வைப்போம். இப்பயிற்சிகளை பெறுபவர்களுக்கு மூவாயிரம் ரூபாயினை வழங்குவதுடன் சீருடைகளையும் நாம் வழங்கி வருகின்றோம். ஆகவே, உங்கள் எதிர்காலத்தை நீங்களே வளர்துக்கொள்ள வேண்டும்' என அவர் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X