Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமாவதி தேசிய வனவிலங்கு பூங்காவை அண்மித்த தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் யானையொன்று இறந்து காணப்பட்டதைத் தொடர்ந்து அக்காணி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று வியாழக்கிழமை அனுமதியளித்தார்.
அத்துடன், இம்மாதம் 25ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் சந்தேக நபருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த யானை கடந்த செவ்வாய்க்கிழமை தனியாருக்குச் சொந்தமான காணியில் இறந்த நிலையில் காணப்பட்டது. இது சம்பந்தமாக குறித்த காணி உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் சட்டவிரோதமான முறையில் தனது காணி வேலியில் மின்சாரம் பாய்ச்சி வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. எனவே, மின்சார வேலியில் யானை சிக்குண்டு உயிரிழந்ததாக காணி உரிமையாளர் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் புதன்கிழமை சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago