Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 26 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
திருகோணமலை நகரசபைக்கு முன்பாகவுள்ள மாணவர் விடுதியிலிருந்து பேரணியாகச் சென்ற மாணவர்கள், கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக நின்று கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சித்த மருத்துவ மாணவர் மன்றத் தலைவர் அன்பழகன் இளங்குமரன் தெரிவிக்கையில், '06 வருடங்களுக்கு முன்னர் பட்டம் பெற்று வெளியேறியோருக்கு இதுவரையில் அரசாங்க நியமனங்களோ, வேலைவாய்ப்போ வழங்கப்படவில்லை.
மேலும், தற்போது வெளியேறும் மாணவர்களும் பழைய மாணவர்களைப் போன்று வேலைவாய்ப்புக்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே, ஏற்கெனவே வெளியேறிய மாணவர்களுக்கும் ஒவ்வொரு வருடமும் வெளியேறும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும்' என்றார்.
'இது தொடர்பான கோரிக்கை அடங்கிய மகஜரை சமர்ப்பிப்பதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு சென்றிருந்தோம். அதன்போது, கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான நியமனங்களை வழங்குவதற்கு மத்திய அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செய்ய வேண்டியுள்ளதென்பதுடன், இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கும் அறிவிக்கப்பட வேண்டுமென்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கூறினார். இதனை அடுத்து, மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜரைக் கையளித்துள்ளோம்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .