Niroshini / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மூன்றினை வைத்திருந்த நபர் ஒருவரை சனிக்கிழமை(9 )மாலை கைதுசெய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் ஹபரனையிலிருந்து திருகோணமலைக்கு முச்சக்கரவண்டியில் அனுமதிப்பத்திரமின்றி மூன்று வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு சென்ற போதே கந்தளாயில் வைத்து கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பயன்படுத்திய முச்சக்கரவண்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு குறித்த நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
18 minute ago
25 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
25 minute ago
44 minute ago