2025 ஜூலை 28, திங்கட்கிழமை

வெவ்வேறு விபத்துக்கள் மூன்றில் அறுவர் காயம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை, திருகோணமலை நகர் மற்றும் நிலாவெளி ஆகிய பகுதிகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற மூன்று வெவ்வேறு விபத்துக்களில் காயமடைந்த அறுவர், திருகோணமலை பொது வைத்தியசாலை, புல்மோட்டை தள வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டை நூரானியா பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த  தனியார் பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற இவ்விபத்தில், முச்சக்கரவண்டியின் சாரதியான புல்மோட்டை 02ம் வட்டாரம், ரஹ்மானியா நகரைச் சேர்ந்த எம்.சப்ரி (17 வயது), எஸ்.அர்ஜுன் பீவி (45 வயது), எஸ்.சபீனா (12 வயது), எஸ்.சஹீலா (18வயது) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

திருகோணமலையிலிருந்து, முல்லைத்தீவு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் பின்புறமாக, வேகமாக வந்த முச்சக்கரவண்டி மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக, புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் மூவர், புல்மோட்டை தள வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, திருகோணமலை, என்.சீ வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கெப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், திருகோணமலை, உவர்மலை, கண்ணகிபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.திலகராஷா (50 வயது) படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெப் வாகன சாரதியான மூதூர், அக்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த எம்.ஆர்.ரம்ஸீன்  (30 வயது) என்பவரை கைது செய்துள்ளதாகவும் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நிலாவெளி, இக்பால்நகர் பகுதியில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதே இடத்தைச்சேர்ந்த ஜே.கணேஷ் (37 வயது) என்பவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .