Editorial / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை ஆறாம் கட்டைப் பகுதியில் சட்டவிரோ தமான முறையில் ஹக்கப்பட்டாஸ் (வாய்வெடி) ஒன்றினை வைத்திருந்த நபர் ஒருவரை புதன் கிழமை(23) மாலையில் கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே கைது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹக்கப்பட்டாஸ்( வாய்வெடி ) சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
51 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
01 May 2026