Thipaan / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, வெலிப்பிட்டிய பகுதியில், மிருகங்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் ஹக்கபடஸ் என்றழைக்கப்படும் வாய்வெடியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நபரொருவரை நேற்றிரவு (09) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ, தெவனிபியவர பகுதியைச்சேர்ந்த ஹேரத் முதியன்சலாகே றம்பண்டா (48வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹக்கபடஸ் என்ற வாய் வெடியை வைத்து, மிருகங்களை வேட்டையாடி வருவதாகப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்தநபர் வயலுக்கு செல்லும் வேளையில் பொலிஸார் சோதனையை மேற்கொண்ட போதே, அவரிடமிருந்து இவ்வெடிபொருள் கைப்பற்றப்பட்டதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை இன்று புதன்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago