Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூலை 01 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.முபாரக், பதுர்தீன் சியானா
ஹக்க பட்டாஸ்கள் நான்கினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், திருகோணமலை, குச்சவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணாண்டோ, நேற்று (30) உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர், மதுரங்குடா, செந்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரப்பங்காடு பகுதியிலிருந்து, நான்கு ஹக்கபட்டாஸ்களை வீட்டுக்குக் கொண்டு செல்லும் போது, வீதிச்சோதனையில் ஈடுபட்ட பொலிஸாரினால் சோதனையிட்ட போதே கைப்பற்றப்பட்டதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
ஹக்க பட்டாஸ் என்றழைக்கப்படும் வாய்வெடியினை பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடி வருவதாகவும் இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
15 minute ago
20 minute ago
46 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
46 minute ago
51 minute ago