2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்ன் விவகாரம்; மூவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், 310 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த மூவரை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, இன்று (15) உத்தரவிட்டார்.

கிண்ணியா, ரகுமானிய்யா நகர், மஹ்ரூப் நகர் பகுதிகளைச் சேர்ந்த 41, வயதுடைய இருவரும், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவருமாக மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியாவில் கைதுசெய்யப்பட்ட இருவரும் தலா 50 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளையும் திருகோணமலை சந்தேகநபரே 210 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளைத் தம் வைத்திருந்த நிலையிலும் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ததப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X