Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன்ஆனந்தம்
“இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைபேற வேண்டுமாக இருந்தால் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் நிலைபெறும்” என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தேசிய சுற்சூழல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“நாட்டின் ஜனாதிபதி மற்றும்பிரதமர் ஆகிய இருவரும் இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மிகவும் நிதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.
அதற்கு எமது பங்களிப்பை வழங்க வேண்டும். ஜனாதிபதி அவர்களின் ஆட்சிக் காலத்துக்குள் நாட்டில் நிலையான ஜனநாயகத்தை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி பதவி ஏற்ற பின்,பு சுற்றாடலில் அதிக கவனம் செலுத்தி வருவதனை நாங்கள் எல்லோரும் அறிவோம். அவர் அவரது காலப்பகுதியில் பல்வேறு விடயங்களை செய்ய முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றார்.
இந்த நாட்டில் நாட்டின் பொருளாதாரம், நாட்டினுடைய கலாசாரம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, நல்லிணக்கம், புரிந்துணர்வு வெவ்வேறு மக்கள் மத்தியில் நாட்டில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நாட்டின் சர்வாதிகாரத்தை இல்லாமல் செய்வது ஜனநாயகத்துக்கு உரிய இடத்தைக்கொடுப்பது போன்ற பல்வேறு கருமங்களில் அவரது அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்று கூறுகின்றபோது, தனக்குள்ள அதிகாரங்களைத்தான் விட்டு விட்டு தான் செல்லத்தயாராக இருப்பதாகவும் அவர் தெள்ளத் தெளிவாக கூறுகின்றார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
17 May 2025