Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, பன்குளம் அவ்வை நகர் ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோவில் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அம்மன் சிலை திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இக்கோவிலின் வெளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இக்கோவிலின் மூலஸ்தானக் கதவு செவ்வாய்க்கிழமை (11) உடைக்கப்பட்டே இத்திருட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கோவிலில் சிலை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மொறவௌப் பொலிஸாரிடம் கோவில் நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை இன்று12) கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
14 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
1 hours ago