2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

'ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினை தீர்க்கப்படும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை வடக்குக் கல்வி வலயத்துக்குட்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினை எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் நிவர்த்தி செய்யப்படும் என கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக பெற்றோருடனான சந்திப்பு, அவரது அலுவலகத்தில்  புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

ரொட்டவெவக் கிராமத்தில் கோமரங்கடவெல வடக்குக் கல்வி வலயத்தில்; தமிழ்மொழி மூலப் பாடசாலைகள் 04  காணப்படுவதுடன், அதிகளவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையாக ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயம் காணப்படுவதாகவும் இச்சந்திப்பின்போது மாகாண கல்வி அமைச்சரிடம் பெற்றோர் தெரிவித்தனர்.

இப்பாடசாலைக்கு 18 ஆசிரியர்கள் தேவைப்படும்போதிலும், தற்போது 08 ஆசிரியர்களே கடமையில் உள்ளனர். இன்னும் 10 ஆசிரியர்களுக்கான   வெற்றிடங்கள் இங்கு காணப்படுவதாகவும் பெற்றோர் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X