2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

'இவ்வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும்'

Thipaan   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

2016ம் ஆண்டு நிறைவடைவதற்கு முன் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என, தேர்தல் காலங்களில் தற்போதய அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தெரிவித்திருந்தார்கள் அதற்கமைய இவ்வாண்டு முடிவடைவதற்குள் இனப் பிரச்சினை தீர்வுக்கான மசோதா நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும் என, தமிழர் சமூக ஜன நாயக கட்சியின் பேச்சாளரும் வடக்குக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியானது, தமிழர் சமூக ஜன நாயக கட்சி என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதன் புதிய மத்திய குழு நிர்வாகிகளுக்கான முதலாவது கூட்டம், தலைவர் சுகு.ஸ்ரீதரன் தலைமையில், திருகோணமலை கடற்காட்சி வீதியில் அமைந்துள்ள அவர்களுடைய அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை (07) மாலை இடம்பெற்றது.

அதில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய ஆட்சியாளர்கள், இலங்கையின் இனங்களுக்கிடையில், நல்லிணக்கத்தைக் கொண்டு

வரப்போவதாகக் கூறியிருந்தனர்.

ஆங்காங்கே சில வேலைத்திட்டங்களை முன் எடுத்திருக்கின்றனர் என்பதை நாங்கள் மறுப்பதற்கில்லை. எனினும், இலங்கையின் இனங்களுக்கிடையில் ஒரு நல்லிணக்கம் விரைவாக தேவைப்படுகிறது. அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த எல்லா இனங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நம்பகரமான தீர்மானம் உடைய நடவடிக்கையை அரசாங்கம் விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கமாக செயற்படும் எனக் கூறியே, தற்போதய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோதும்,  மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய பொருளாதார அபிவிருத்தி இல்லாமல் மக்கள் விலை வாசி உயர்வுக்குள் சிக்கிக் கஷ்டப்படுகின்றனர்.

எனவே, பொருளாதார அபிவிருத்தியை மேற்கொண்டு மக்களின் வருமானத்தை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையானால், விலைவாசியைக் குறைத்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகுக்க வேண்டும்' போன்ற சில முக்கிய தீர்மானங்களை தெரிவித்தார்.

மேலும், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியானது, ஒரு ஜனநாயக கட்சியாக வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள், வட்டாரங்கள், பிரதேசங்கள் மட்டத்திலும் கிராம மட்டத்திலும் கிளைகள் அமைக்கப்பட்டு, மக்களுடைய கட்சியாக விரிவடைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இக்கட்சியை பதிவு செய்வதற்காக, தேர்தல் ஆணையாளரிடம் பேச்சுவார்த்தை செய்யப்பட்டு வருகிறது. அதுவும் விரைவில் இடம் பெறும் என்றார்.

இக் கூட்டத்துக்கு, வடக்கு, கிழக்கின் பல மாவட்டங்களில் இருந்து உறுப்பினர்கள் வருகை தந்திருந்தமை குறிபிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .