2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எட்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைதானவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

 

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி பகுதியில் எட்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ, நேற்றுச் சனிக்கிழமை (17) உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருகோணமலை, நிலாவெளி, கோணேசபுரி பகுதியைச் சேர்ந்த சுப்பரமணியம் சுரேந்திரன் (24 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குச்சவெளி பொலிஸ் பிரிவில் தங்க நகைகளை திருடியமை, கையடக்கத் தொலைபேசி திருடியமை, வீட்டொன்றை உடைத்தமை போன்ற நான்கு குற்றச்சாட்டுக்களும் துறைமுகப்பொலிஸ் நிலையத்தில் இரண்டு மாலைகளை திருடியமை, மோட்டார் சைக்கிள் திருடியமை போன்ற குற்றச்சாட்டுக்களும் சம்பூர் பொலிஸ் பிரிவில் தங்க நகை திருடிய  குற்றச்சாட்டும் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவருடைய அடையாள அட்டையை பயன்படுத்தி வங்கியில் 05 பவுண் நகை அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் அடகு நிலையத்தில் தங்கமாலைகள் 4 அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்முனையிலுள்ள அடகு வைக்குமிடத்தில் 01 தங்க மாலை அடகு வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X