Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால், குச்சவெளி மற்றும் பட்டணமும்சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுகளில்; குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கிணறுகளில் நீர் வற்றி வருவதாகத் தெரிவித்த பொதுமக்கள், பயிர்ச் செய்கைக்கு போதுமான நீரை பாய்ச்ச முடியாத நிலைமை காணப்படுவதாகவும் கூறினர்.
குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் கல்லம்பத்தை, பள்ளவக்குளம் ஆகிய கிராமங்களிலுள்ள மக்களுக்குப் பிரதேச சபையின் ஊடாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் புல்மோட்டையில்; நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அப்பிரதேச செயலாளர் பொன்னம்பலம் தனேஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை, பட்டணமும்சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்காயூற்று, முத்துநகர், விலாங்குளம் ஆகிய கிராமங்களிலுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெரிவித்தார்.
மேலும், வரட்சி காரணமாக குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுமாயின், அது தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்குமாறு திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்; வேண்டுகோள் விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago