Suganthini Ratnam / 2016 ஜனவரி 18 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி
தோப்பூர், தேக்கஞ்சோலைப் பகுதியில் 75 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படவுள்ள பொது விளையாட்டு மைதானத்துக்கான காணி தொடர்பில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், மூதூர் பிரதேச செயலாளர், மூதூர் பிரதேச சபைச் செயலாளர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவந்து சுமூகமான தீர்வை பெற்றுத் தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூப் தெரிவித்தார்.
தனியாருக்குச் சொந்தமான காணியா அல்லது பொதுக் காணியா என்ற விடயம் பூதாகரமான பிரச்சினையாக எழுந்துள்ள நிலையில், இது சம்பந்தமாக காணிச் சொந்தக்காரர்களுடனும் தோப்பூர் பிரதேசத்திலுள்ள 20 கடினபந்து அணி வீரர்களுடனும் சுமூகமாக பேசி பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கானக் கூட்டம் தோப்பூர் பொது நூலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, இரு தரப்பினருடனும் அவர் சுமூகமாக பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்தபோதும், இரு தரப்பினரினதும் கருத்து முரண்பாடுகள் காரணமாக ஒரு முடிவுக்கு வராமல் போனது.
11 minute ago
20 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
32 minute ago
1 hours ago