Thipaan / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில், 500 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த நபரொருவரை 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, நேற்றுத் திங்கட்கிழமை(17) உத்தரவிட்டார்.
கந்தளாய், ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், கேரளா கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போதே, வீட்டின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் கேரளா கஞ்சாவைக் கைப்பற்றியதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரையும் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், நேற்று ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026