George / 2016 ஜூலை 08 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை வான்எல பிரதேசத்தில் ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற நபர் ஒருவரை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் எச்.ஜி.தம்மிக்க, வியாழக்கிழமை (7) உத்தரவிட்டார்.
சேருவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், வான்எல பகுதியிலிருந்து சேருநுவர பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கொண்டு சென்ற போது புதன்கிழமை(6) சூரியபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
51 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
21 Mar 2026