2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

17.7 கிலோகிராம் ரி.என்.ரியுடன் கைதான இருவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

17  கிலோகிராம் 700 கிராம் ரி.என்.ரி வெடி பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்றுத் திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மூதூர் பகுதியைச் சேர்ந்த இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவ்வெடிமருந்து விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் வவுனியா பகுதியைச் சேர்ந்த நால்வரை, வவுனியா பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

அவர்கள் நால்வரையும், எதிர்வரும் 31 ஆம் திகதி மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீதிவான், பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .