Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
திருகோணமலை மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் கிடைக்காமையினால், பல கிராமங்களிலுள்ள மக்கள் பல்வேறு நோய்ப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறான கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர்வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் கோரிக்கை விடுத்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில், புதன்கிழமை (28) நடைபெற்ற கூட்டத்திலேயே, அவர் இந்தக் இக்கோரிக்கையை விடுத்தார்.
அமைச்சர் அநுர பிரியதர்சன உள்ளிட்டோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாட்டாளிபுரம், வீரமாநகர், நல்லூரி, மலைமுந்தல் நீலாக்கேணி போன்ற கிராமங்களிலுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை.
இவ்வாறு மாவட்டத்திலுள்ள மொறவௌ போன்ற பகுதிகளிலும், சுத்தமான நீரின்றி மக்கள் சிரப்படுகின்றனர். இதனால் பல்வேறு நோய் தாக்கத்துக்கு இக்கிராமங்களில் உள்ள மக்கள் உள்ளாகின்றனர். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளதாகவும் வைத்தி ய அறிக்கைள் மூலம் அறிய முடிகிறது.
இவ்வாறான கிராமங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. தற்போது நிலவும் வரட்சி காரணமாக நீர்த் தட்டுப்பாடு நிலவுவதை இங்குள்ள பிரதேச செயலாளர்களும் சுட்டிக்காட்டினர். அவற்றையும் உள்ளடக்கியதாக, சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அத்தோடு, தற்போது வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே என்னவோ விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால் அங்காங்கே இறக்கும் மக்களை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மட்டுமே மரண விசாரணைக்காக கொண்டு வரவேண்டிய நிலமையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சிரமப்படுகின்றனர்.
வைத்தியசாலைகளில் அதற்கான வசதிகள் ஏற்பாடுகள் இன்மையினால் தான் அந்நிலமை ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களை பெரும் பொருட்செலவில் கிராம மக்கள் திருகோணமலைக்கு எடுத்து வருகின்றனர். இதனால் பிராந்திய ரீதியிலுள்ள
வைத்தியசாலைகளுக்கு இதுதொடர்பான வசதிகளை வழங்கி, மக்களின் சிரமங்களைப் போக்க வேண்டும்.
எமது மாவட்டத்தில் யானைத் தாக்குதல்களினால் அடிக்கடி மக்கள் சிரமப்படுகின்றனர். அண்மையில், பள்ளிக்குடியிருப்பில் யானை தாக்குதலால் இறந்த பெண், தனது காணியில் வைத்தே தாக்குதலுக்குள்ளாகி இறந்தார்.
அங்கு நான் சென்ற போது, மாலை 5 மணிக்கே யானை வந்து விடுகின்றது. இவ்வாறே சேருவில பிரிவில் உள்ள அதியம்மன் கேணி, இலிங்கபுரம் போன்ற பகுதிகளிலும் யானையின் தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர். இவற்றுக்கான பாதுகாப்பு ஒழுங்கை சம்பந்தப்பட்ட அமைச்சு செய்ய முன்வர வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago