2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'சிறந்த அரசியலமைப்பு மாற்றமே நிலையான சமாதானத்துக்கு வழியாகும்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

சிறந்த அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவதே, இந்த நாட்டில் நிலையான, நீடித்த சமாதானத்துக்கு ஒரேயோரு வழியாகும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

'கிழக்கின் எழுச்சி -2016' தொனிப்பொருளிலான எனும் விவசாயக் கண்காட்சியானது திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமாகியது. இக்கண்காட்சியின் இறுதி நாளான  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'தற்போது சமாதானம் நிலவுகின்றது. இந்தச் சமாதானம் நிலையானதாக நீடித்திருக்க வேண்டுமாயின், ஒன்றையொன்று மேவிடாது வாழக்கூடிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்

அவ்வகையான சிறந்த அரசியலமைப்பை தேடி  அமுலாக்க வேண்டியதே நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும். இந்த விடயத்தில் ஜனாதிபதி ஆர்வமாக உள்ளார். ஆகவே அனைவரினதும்; பங்குபற்றுதலுடன் சிறந்த அரசியலமைப்பை இந்த நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்பதுடன், இந்த நல்லாட்சியை நிரந்தரமாக்க வேண்டும்' என்றார்.

'நாங்கள் எல்லோரும் ஓர் அன்பான அம்மாவால் உருவாக்கப்பட்ட அழகான குழந்தைகள். எங்களுக்கு இடையில் இருக்கின்ற தேவை அற்ற வேற்றுமைகளை நீக்கிவிட்டு,  ஒன்றிணைந்து தேசியக்கொடியை ஏற்றிவிட்டு தேசிய கீதம் பாடுகின்றோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X