Princiya Dixci / 2016 நவம்பர் 18 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் நீலாங்கேணி காட்டுப்பகுதியில் 6 வயதுடைய சிறுமியைக் கொலை செய்த குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த 16 வயதுடைய சிறுவனுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18), சிறுவனை, மீண்டும் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 01ஆம் திகதி வரை, சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்குமாறு நீதவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த 9ஆம் மாதம் 08ஆம் திகதி, வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஜெஹதீஸ்வரன் அஜந்தா எனும் சிறுமியே, கொலை செய்யப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமியைக் காணவில்லையெனச் சம்பவ தினத்தன்று, சம்பூர் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்ததற்கமைவாக பொலிஸாரும் பொதுமக்களும் சேர்ந்து நடத்திய தேடுதலின் போது, சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago