Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2016 நவம்பர் 20 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
'எதிர்க்கட்டிச் தலைவர் இரா.சம்மந்தன் கூறுவதைப் போன்று, வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு இன்றோ நாளையோ தீர்வு கிடைக்கப்போவதில்லை. முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்துள்ள தலைவர்கள் முதலில் ஒன்றுச் சேர வேண்டும்.
அதேபோன்று, தமிழ் சமூகத்தில் அதிகரித்துள்ள தலைவர்கள் ஒன்றுச் சேர வேண்டும். இதன் பிறகு, முஸ்லிம் தலைமையும் தமிழ் தலைமையும் ஒன்றுச் சேரவேண்டும். தலைவர்கள்; அதிகரித்துள்ளமை இரு சமூகத்தினதும் சாபக்கேடாகும்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
முகம்மது பௌ;மியின் 'நிஜம்' என்ற சஞ்சிகை வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (18), கிண்ணியா நகரசபை நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரைத்த அவர்,
'வடக்கு, கிழக்கு இணைவதோ பிரிவதோ வேறுவிடயம். கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு மாகாண சபை உறுப்பினர் கிழக்கு மாகாணத்தை ஆள வேண்டியவர்கள்; தமிழர்கள்தான் என்று கூறியிருக்கின்றார். இதைக் கேட்கின்ற முஸ்லிம் சமூகம், வடக்கு கிழக்கை இணைக்க விரும்புவார்களா? வடக்கையும் கிழக்கையும் இணைக்க விரும்பினால், முதலில் முஸ்லிம் மக்களின் உள்ளங்களை வெல்ல வேண்டும். அதை இன்னும் தமிழ் கூட்டமைப்பு செய்யவில்லையே. நல்லாட்சி வந்தபோதும் தமிழ், முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழவில்லையே.
இந்த நல்லாட்சியில் இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்பதை தெரிந்திருந்தும் சம்மந்தன் இன்னும் தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.
தற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கம் என்று கூறுகின்றனர். மேலும், நல்லாட்சி என்றும் கூறுகின்றனர். சில அமைச்சர்கள்; மஹிந்தவுடன் பாத யாத்திரை செல்கின்றனர். இது ஜனாதிபதிக்கு எதிரானது அல்ல. ஆனால், அரசாங்கத்துக்கு எதிரானது என்று கூறுகின்றார்கள். இது என்ன வேடிக்கையான விடயம். இத்தகையதொரு நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா? கிழக்கில் முஸ்லிம்கள் இன்று எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு ஒரு போதும் தீர்வு கிடைக்காது.
54 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 60 பில்லியன் வரிச் சலுகையுடன் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இது பிரதமர் ரணிலுடைய பணமா? அல்லது எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்மந்தனுடைய பணமா?. இதுவா நல்லாட்சி' என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago