Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளமோதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக நியமிக்க கோரி கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஆர்.எம்.அன்வரால் அவசர பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இப்பிரேரணையைச் சமர்ப்பித்து அவர் உரையாற்றுகையில், 'தேசிய ஆங்கில டிப்ளமோதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக நேர்முகப்பரீட்சையின் மூலம் உள்வாங்க வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
நேற்று (27) இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின்போது அவசர பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாணத்தில் ஆளுநரின் கீழுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் பரீட்சைகள், அதன் மூலம் வழங்கப்படும் நியமனங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக திருப்தியற்ற நிலைமையே காண முடிகிறது. தொடர்ந்து இவற்றை கிழக்கு மாகாண சபை அனுமதிக்க முடியாது.
கடந்த ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் போட்டிப்பரீட்சையில் குறித்த தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளமோதாரிகளை ஆங்கில ஆசிரியர்களையும் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை குறித்து கிழக்கு மாகாணத்துக்கு மட்டும் ஒரு விதமாகவும் வட மற்றும் வடமத்திய மாகாணங்களில் முறையும் பின்பற்றப்படுகின்றன. அங்கு வெறுமனே நேர்முகப்பரீட்சயின் மூலம் தோற்றி ஆங்கில ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
வடமத்திய மாகாணத்தில ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற தொனிப்பொருளில் ஆயிரம் ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்டனர். அவற்றில் 74 தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளமோதாரிகளை நேர்முகப்பரீட்சையினால் உள்வாங்கப்பட்ட நிலையில் வட மாகாணத்திலும் அவ்வாறே சேர்ந்துகொள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறே கிழக்கிலுள்ளவர்களையும் உள்வாங்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிழக்கு மாகாண சபை ஒரு பொறிமுறையின் கீழ் கொன்டுசெல்லப்படுகின்ற அதேவேளை ஆளுநரின் கீழுள்ள பொது சேவைகள் ஆணைக்குழு மாத்திரம் சுயமாக இயங்குவது எந்த வகையிலும் பொருத்தமற்றது.
எனவே முதலமைச்சரும் அமைச்சர் வாரியமும் சரியான ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டும்.
குறித்த ஆங்கில டிப்ளமோதாரிகள் 3 வருட கற்கைநெறியை முடித்து ஆறு மாதகாலம் பயிற்சிக்காக அரசாங்கப் பாடசாலைகளில் நியமிக்கப்பட்டு தரமான ஆங்கில ஆசிரியர்களாக வெளிவருகின்ற அவர்களுக்கு ஆங்கில துறை சார்ந்த நியமனத்தை தவிர வேறு ஒன்றுமே பெறமுடியாத நிலையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே சிறந்தது.
பொதுச் சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றபோது கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே வெளி மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் மற்றும் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளமோதாரிகளை உள்வாங்குவதனால் கிழக்கு மாகாண பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. அவ்வாறே வெளிமாகாணங்களில் விண்ணப்பங்கள் கோரும்போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் உள்ளீர்க்கப்படாதபோது கிழக்கு மாகாணம் மட்டும் விதி விலக்கா?' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025