Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட், எம்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்
நாட்டுக்கும் மக்களுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத, திறமையற்ற, அரசியல் அதிகாரத்தை பயன்படுத்ததாத அரசியல்வாதிகள்தான், இன்று இனவாதக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி அரசியல் இலாபம் திரட்டுவதற்கு முயற்சிக்கின்றார்கள் என நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.
இவர்களால் நாட்டில் எவ்வாறு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் இவ்வாறான அரசியல்வாதிகள் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் வகிபங்கு எனும் தலைப்பில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று (01) இடம் பெற்ற பயிற்சிப் பட்டறையில் உரையாற்றிய போதே, பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர், அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில், இனவாதம், மதவாதம், வகுப்புவாதம் போன்றன இல்லாமல் செய்யப்பட்டு, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சகல மக்களும் முன்வர வேண்டும்.
அத்தோடு, எமது நாடு, புது யுகத்துக்கு வந்திருக்கின்றது. ஆதலால் நாம் பல விடயங்களை புதுப்பிக்க வேண்டியுள்து. இனவாதம், வகுப்பு வாதங்கள் சார்பாக செய்திகளை வெளியிடாது, நாட்டில் சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் செய்திகளை பிரசுரித்தால் பிரயோசனமாகயிருக்கும் என தெரிவித்தார்.
இச்செயலமர்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப், சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன், பத்திரிகை பேரவையின் தலைவர் சட்டத்தரணி கொக்கல வெல்லால பந்துல ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago