Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூலை 25 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
எரிகாயங்களுடன் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூன்று பெண்களின் தாயொருவர், நேற்று மாலை (24) மூதூர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என, மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூறூல்லா தெரிவித்தார்.
கடந்த 18 ஆம் திகதியன்று, வீட்டில் சமைப்பதற்காக அடுப்புக்குத் தீ மூட்டிக் கொண்டிருந்த போது, தவறுதலாக தீப்பற்றியதில் மூதூர், நடுத்தீவு பகுதியைச் 30 வயதுடைய குறித்த பெண் படுகாயமடைந்திருந்தார்.
உயிரிழந்த பெண்ணிண் சடலத்தை நேற்று மாலை நேரடியாகச் சென்று பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி, சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு, வைத்தியசாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .