Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூன் 21 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-றியாஸ் ஆதம், வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்
கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் அரச மற்றும் ஏனைய நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபைக் கொடியும் ஏற்றப்பட வேண்டும் என அம்மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்; தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் திருகோணமலையிலுள்ள மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது, கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்படும்போது, மாகாண சபைக் கொடியும் ஏற்றப்பட வேண்டும் என்று கோரும் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் அரசாங்க நிகழ்வுகளையும் ஏனைய கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளையும் அவதானிக்கும்போது ஒரு சில நிகழ்வுகளைத்; தவிர, ஏனைய நிகழ்வுகளில் தேசியக்கொடியும் அந்நிகழ்வுகளுடன் சம்மந்தப்பட்ட கொடிகளுமே ஏற்றப்படுவதை அவதானிக்க முடிகிறது' என்றார்.
'குறிப்பாக, எமது மாகாணத்தின் கௌரவத்தைப் பேணுவதற்காக அனைத்து நிகழ்வுகளிலும் மாகாண சபைக் கொடியும் ஏற்றப்பட வேண்டும் என்ற பணிப்பை இம்மாகாண சபை மூலமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துத் திணைக்களங்கள், சபைகள், கழகங்கள் அலுவலகங்களுக்கும் விடுக்க வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
இதற்குப் பதில் அளித்த கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், 'இவ்விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பதவிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முதலமைச்சர், அமைச்சர்கள், தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண சபைக் கொடியை ஏற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும்' என்றார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago