2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'நிதியொதுக்கப்பட்டால் வேலைகள் முடிக்கப்படும்'

Thipaan   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வில்கம் விஹார பிரதேசத்தில், குழாய் நீர் திட்டத்தின் மிகுதி வேலைகள், நிதியொதுக்கப்பட்டால் மிக விரைவில் முடித்துக்கொடுக்கப்படும் என, நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை மாவட்ட பிராந்திய முகாமையாளர் யூ.கே.எம்.முஸாஜித் தெரிவித்தார்.

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதியிலுள்ள வில்கம் விஹார பகுதியில் வசிக்கும் 15 குடும்பங்களுக்கு நிதியொதுக்கப்பட்டும் சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லையெனக்கோரி, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக விவரங்களைச் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களிடமே அவர் இதனைத் தெரிவித்தார்.

வில்கம் விஹார பகுதியில், குழாய் நீரைப் பெற்றுக்கொள்வதற்கு அண்ணளவாக 850 மீற்றர் பகுதிக்கு குழாய் பொருத்த வேண்டியுள்ளதாகவும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த நிதியில், 524 மீற்றர் வேலையினைச் செய்து முடித்துள்ளதாகவும் மிகுதியான பகுதிக்கு குழாய் பொருத்த வேண்டியுள்ளதாகவும் அவ்வேலையினை செய்து முடிப்பதற்கு நிதியயொதுக்கப்பட்டால் வேலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .