2025 மே 19, திங்கட்கிழமை

'நிபந்தனை அடிப்படையிலாவது அரசியல் கைதிகளை விடுவிக்கவும்'

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

'எந்தவிதக் குற்றச்சாட்டுகளுமின்றி பல வருடங்களாக சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை, நிபந்தனையின் அடிப்படையிலாவது விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  கோரிக்கை விடுத்துள்ளார்.

'சர்வதேச ரீதியில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசாங்கத்துக்கு, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமும் மேலும் பல அழுத்தங்களை ஏற்படுத்தும்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நேற்றுத் திங்கட்கிழமை கவனயீர்ப்;பு போராட்டம் நடைபெற்றது. இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர்,

'எந்தவித குற்றச்சாட்டுகளுமின்றி சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் குரல்கொடுத்துள்ளேன்.

கடந்த காலங்களில் பல அரசியல் கைதிகள் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோன்று, நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் கைதிகள் பிரச்சினையை  சமூகம் சார்ந்த பிரச்சினையாக பார்க்காது,  பொதுப் பிரச்சினையாகக் கருதவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X