Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூலை 02 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
முஸ்லிம்களை பரம வைரிகளாகக் கருதி படைத்த அல்லாஹ்வையும் பெருமானாரையும் இஸ்லாத்தையும் தொடர்ந்து நிந்தித்து வரும் ஞானசார தேரர் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில், கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில் நேற்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றகையில்,
“கடந்த சில வருடங்களாக ஞானசார தேரர் வேண்டுமென்றே முஸ்லிம்களை தூசித்தும், புனித குர்ஆனையும் பெருமானாரையும் நிந்தித்து வந்தவர் இப்போது அல்லாஹ்வையும் இழிவுபடுத்த தொடங்கியுள்ளார்.
அளுத்கமயில் கலவரத்தைத் தூண்டி முஸ்லிம்களின் உயிர்களையும் பல்லாயிரம் பில்லியன் பெறுமதியான உடைமைகளையும் அழித்ததற்கு உடந்தையாக செயற்பட்ட தேரர் இன்னும் தனது இழிவான செயலை நிறுத்தியதாகத் தெரியவில்லை. அளுத்கம சம்பவம் தொடர்பில் தேரருக்கு எதிராக 41 முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும், எந்தவொரு முறைப்பாடும் விசாரிக்கப்படவுமில்லை, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுமில்லை.
மஹியங்கனையில் இடம்பெற்ற சம்பவத்தைக் காராணம் காட்டி அங்கு சென்று இஸ்லாத்தை மிக மோசமாக விமர்சித்தார். அவரது செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்த முறைப்பாட்டின் வெளிப்பாடாகவே, அல்லாஹ்வையும் பெருமானாரையும் இழிவுபடுத்தியுள்ளார்.
இஸ்லாம் வன்முறை மீது விருப்பம் கொண்ட மார்க்கம் அல்ல. முஸ்லிம்கள் எப்போதும் அமைதியையும் சமாதானத்தையும் விரும்புபவர்கள். மற்றைய இனங்களுடன் பரஸ்பரம் அன்புடனும் நல்லுறவுடனும் பழகுபவர்கள். தாய்நாட்டுக்கு விசுவாசமாகா வாழ்ந்த இந்த மக்கள் மீது இனவாதிகள் தொடர்ந்தும் தங்களது வக்கிரப்புத்தியைக் காட்டி வருவதுதான் வேதனையானது.
நல்லாட்சி உருவாகும்போது உறுதியளிக்கப்பட்ட மத நிந்தனைச் சட்டத்தை அவசரமாகக் கொண்டுவருமாறு அரசாங்கத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். அதன் மூலம் இவ்வாறான இனவாதிகளின் கொட்டங்களை அடக்கமுடியும் என ஓரளவு நம்புகின்றோம்.
புனித ரமழான் காலத்தில் இறுதிப் பத்தில் நாம் இருந்துகொண்டு இருக்கின்றோம். எம்மிடம் எத்தகைய பேதங்கள் இருந்தாலும் அத்தனையையும் சுருட்டி வைத்துவிட்டு இஸ்லாத்துக்கெதிரான சவால்களை முறியடிக்க ஒன்றுபடுவோம். நாம் ஒன்றுபடுவதன் மூலமே இவ்வாறான சக்திகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க முடியும்.
இன்று உலகளாவிய முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். உலகில் சுமார் 49 முஸ்லிம் நாடுகளில் குண்டு வெடிப்புக்களும், இரத்தக்களரியும் இடம்பெற்று வருகின்றது. முஸ்லிம்களை அழிப்பதற்கு மேலேத்தேய சக்திகள் கங்கணம்கட்டி வருகின்றன. அண்மையில் துருக்கி விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு பெரிய சான்று.
எனவே, இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வுகான ஒற்றுமை மூலமும். பிரார்த்தனை மூலமும் வழிகாண முடியும் என நான் நம்புகின்றேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
17 minute ago
23 minute ago