2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

75 மாடுகள் திருட்டு: மூவர் கைது

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

ஹொரவ்பொத்தானை-துடுவெவப் பகுதியிலிருந்து 75 மாடுகளைத் திருட்டுத்தனமாகக் கொண்டு சென்ற மூன்று சந்தேகநபர்களை, இன்று திங்கட்கிழமை (03) கைதுசெய்துள்ளதாக ஹொரவ்பொத்தானப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் ரபீக் (வயது 45) சாவுல் ஹமீட் சஹிர்தீன் (வயது 36) மற்றும் ஹொரவ்பொத்தானை-துடுவெவச் சேர்ந்த ஐயதிலகே ஜீவர்ந்த ஜெயதிலக (வயது 23) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

துடுவெவப் பிரதேசத்திலுள்ள மாடுகள் மேய்ச்சலுக்காகச் சென்ற போது, காட்டு வழியூடாக கன்தளாய் பகுதிக்கு சாய்க்கப்பட்டு விற்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை, கெப்பித்திகொல்லாவ நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தவுள்ளதாகவும் மேலும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானைப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X