Suganthini Ratnam / 2015 நவம்பர் 05 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
சம்பூரில் மீள்குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 134 மாணவர்களின் போக்குவரத்துக்காக பருவகால பயணச்சீட்டுகள் புதன்கிழமை (04) மாலை வழங்கப்பட்டன.
சம்பூர் மகா வித்தியாலயம் விடுவிக்கப்படும்வரை தற்காலிகமாக சேனையூர் மத்திய கல்லூரியின்; விடுதியில் சம்பூர் மகா வித்தியாலயம் இயங்குகின்றது. இந்த மாணவர்கள் சம்பூரிலிருந்து சேனையூர்வரை பஸ்ஸில் சென்றுவரவேண்டியுள்ளது.
இந்நிலையில், 134 மாணவர்களுக்கும் மாதாந்தம் 14,160 ரூபாவை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனின் முயற்சியினால், மாகாண போக்குவரத்து அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டது.
சேனையூரிலுள்ள சம்பூர் மகா வித்தியாலயத்தில் வைத்து இந்த மாணவர்களுக்கு பருவகால பயணச்சீட்டு, பாடசாலையின் மூன்றாம் தவணை முடியும்வரை செல்லுபடியாகும்.

21 minute ago
33 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
38 minute ago
46 minute ago