Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 நவம்பர் 29 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகச் செயலாளர் யார்? என்று மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை கேள்வி எழுப்பியபோது, மாகாணசபையில் சூடான விவாதமும் சலசலப்பும் ஏற்பட்டன.
மாகாணசபையின் 66ஆவது அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை எழுப்பிய இரண்டாவது கேள்வியின்போது, மேற்படி ஊடகச் செயலாளர் தொடர்பில் கேள்வியெழுப்பினார்.
இதன்போது மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், தனது பிரத்தியேகச் செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளர்களின் பெயர்களை வெளியிட்டார்.
இதற்குப் பதிலளித்த மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர், பத்திரிகைகளில் வெளியாகும் பெயர்களுக்கும் தற்போது தாங்கள் கூறும் பெயர்களுக்கும் வித்தியாசம் இருப்பதாகக் கூறியபோதே சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago