2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

62 முதிரை மரக்குற்றிகளுடன் இருவர் கைது

Thipaan   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

கோமரங்கடவெல காட்டு வழியூடாக திருகோணமலை நகருக்கு 62 முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற இரண்டு சிறியரக லொறிகளையும் முச்சக்கரவண்டியொன்றையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த குச்சவெளிப் பொலிஸார், இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

கோமரங்கடவெல காட்டு வழியூடாக இரண்டு லொறிகளில் 62 முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்செல்வதாக பொலிஸாருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (11) கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அவ்வீதியினூடாக சென்ற இரண்டு லொறிகளை நிறுத்தியுள்ளனர்.

இதன்போது, ஒரு லொறியின் சாரதி லொறியை நிறுத்திவிட்டு சாவியுடன் தப்பியோடியதாகவும் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், வீதிகளில் நடைபெறுகின்றவற்றைத் தகவல்களாக வழங்கிச் சென்ற ஒருவரை முச்சக்கரவண்டியுடன்; கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்படவர்கள் திருகோணமலை, முருகன் கோயில் வீதி இல-94 வசித்து வரும் சுவேந்திரன் தியாகரன் (24 வயது) மற்றும் அதே இடத்தைச்சேர்ந்த எஸ்.சுபராஜா (25 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் திருகோணமலை நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X