Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
“ஜி.எஸ்.பி வரிச்சலுகையைப் பெறுவதற்காக, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் முயற்சிகள் மேற்கெள்ளப்பட்ட போது, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் 58 விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என அப்போது கேட்கப்பட்டது. இவை அனைத்துமே யுத்தம் தொடர்பான விடயங்கள். ஆனால் இன்று, முஸ்லிம் தனியார்ச் சட்டத்தோடு, ஜி.எஸ்.பி வரிச்சலுகையை முடிச்சுப்போடுவது என்பது ஒரு வேடிக்கையான விடயம்” என, தேசிய சூரா சபையின் தலைவா் கலாநிதி தாரிக் மஸ்மூத் தெரிவித்தார்.
கிண்ணியா மஜ்லிஸ் அஸ் சூரா அமைப்பின் அனுசரணையுடன் கிண்ணியா மத்திய கல்லூரி மண்டபத்தில், தேசிய சூரா சபைக்கும் திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “முஸ்லிம் சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமய, சமூக, கலாசார விடயங்களில் கை வைக்கின்ற நடவடிக்கை பல வருடங்களாகத் திட்டமிடப்பட்டு செயற்பட்டு வருகின்றமை புலனாகிறது. முஸ்லிம் தனியார்ச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யபடவேண்டுமானால், முஸ்லிம் அமைப்புக்களின் ஒத்துழைப்போடு செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே நடைபெறுகின்றன.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட அல் அக்ஸா மஸ்ஜித் தொடா்பான பிரேரணையில் அரசாங்கம் வாக்களிப்பில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்காமையையிட்டு, தேசிய சூரா சபை தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தலைமைத்துவங்கள் சத்திய வழியில் இருக்க வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்த முடியும். ஒன்றுபட்டால் மாத்திரமே சாதிக்க முடியும். ஒற்றுமை எனும் கயிறு பற்றி அல்குர்ஆன் கூறுகின்றது. பல நூல்களால் திரிக்கப்பட்ட கயிற்றால் யானையையும் வீழ்த்தலாம். அவ்வளவு பலமானது. இதற்காகத்தான் மிகவும் சவால் மிகுந்த ஒரு கட்டத்தில் தேசிய சூரா சபை உருவானது” என்றார்.
50 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
6 hours ago